சல்மான் கான் நடித்து வரும் 'தபாங் 3' படத்தில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப், அர்பாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தபாங் 3'. சல்மான் கான் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, தயாரித்து வருகிறார்.
'தபாங்' படங்கள் எப்போதுமே நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அதில் 3-வது பாகமாக வெளிவருவதால், இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது, டிசம்பர் 20-ம் தேதி 'தபாங் 3' வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளையுமே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தான் வெளியிடவுள்ளது.
'தபாங் 3' வெளியாகும் டிசம்பர் 20-ம் தேதி தான் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஹீரோ' படமும் வெளியாகிறது. மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.