தமிழ் சினிமா

சமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்: சாடிய சாக்‌ஷி அகர்வால்

செய்திப்பிரிவு

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக கிண்டல் செய்தவர்களை கடுமையாகச் சாடியுள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சி சமீபமாக பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சாக்‌ஷி அகர்வால். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதர பிக் பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் கிண்டல் செய்தனர்.

அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "எனது ட்வீட், எனது உரிமை அமைதியாகுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்குப் பேசும் உரிமை இருக்கிறது. நையாண்டி செய்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாகச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த ஆதர்சங்களுக்குக் கோயில் கட்டுங்கள்" என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT