தமிழ் சினிமா

நவம்பரில் 'சுமோ' வெளியீடு

செய்திப்பிரிவு

ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா- ப்ரியா ஆனந்த் நடித்துள்ள 'சுமோ' திரைப்படம் நவம்பரில் வெளியாக உள்ளது.

'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கிய ஹோசிமின் தற்போது மிர்ச்சி சிவா- ப்ரியா ஆனந்த் நடிப்பில் 'சுமோ' படத்தை இயக்கி வருகிறார். இதை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 'சுமோ' திரைப்படம் நவம்பரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT