தமிழ் சினிமா

எனக்கு காதல், கல்யாணத்தில் விருப்பமேயில்லை: வரலட்சுமி சரத்குமார்

செய்திப்பிரிவு

எனக்கு காதல், கல்யாணத்தில் விருப்பமேயில்லை என கன்னிராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் நாயகி வரலட்சுமி சரத்குமார்.

விழாவில் அவர் பேசியதாவது:

புதிய இயக்குநர்கள் என்றாலே நிறைய சவால் இருக்கும். அதனாலேயே பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். இதுவரைக்கு ஸ்க்ரிப்ட் கேட்டபோது நான் இப்படி சிரித்ததேயில்லை.

ஆனால், முத்துக்குமரனின் ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். போடா போடிக்குப் பின்னர் நான் காமெடி படம் பண்ணதேயில்லை.

இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. இங்க எங்களை எப்படிப் பார்க்கிறீங்களோ அதேபோலத்தான் செட்லையும் சிரிச்சுகிட்டே இருந்தோம். படமும் அதே எனர்ஜியோட இருக்கும்.

இந்த மாதிரி படத்தை தயாரித்த சரவணனுக்கு நன்றி. இந்தப் படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது.

இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம். ஒரு புதிய இயக்குநரின் படத்துக்கு ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி'. இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு முத்துக்குமரன் இயக்கிய 'தர்மபிரபு' வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'கன்னிராசி' படத்தை வெளியிட தயார்படுத்திவிட்டார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

வரலட்சுமி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது "நான் திருமணமே வேண்டாம் என்கிறேன். நீங்கள் காதல் திருமணமா? பெற்றோரால் நிச்சயக்கப்படும் திருமணமா எனக் கேட்கிறீர்கள். நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பமே இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணத்தை நான் வெறுக்கவில்லை. எனக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT