தமிழ் சினிமா

கிரிக்கெட்டில் கால்குத்தி, பூனைப்பிடி!

செய்திப்பிரிவு

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது சோனி லிவ் (SonyLiv) இணையதள சேனலில் ஒளிபரப்பாகிறது. இதில் தமிழ் வர்ணனையாளராக பொறுப்பேற்று அசத்தி வருகிறார் படவா கோபி.

சின்னத்திரை நிகழ்ச்சிகள், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு என பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கிரிக்கெட் வர்ணனையிலும் தீவிரமாக இருக்கிறார் படவா கோபி. இந்த புதிய பயணம் குறித்த அனுபவங்களை கேட்டபோது, அவர் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முதல், எல்லா தரப்பு ரசிகர்களும் தமிழ் வர்ணனையை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சீரியல் பார்க்கும் பெண்கள்கூட, தமிழில் வர்ணனை கேட்க முடியும் என்பதால், கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுபோன்ற சூழலில், சோனி சேனல் வழியாக வர்ணனையாளராக உள்ளே வருவதில் ரொம்ப சந்தோஷம்.

இயல்பாகவே தமிழ் எனக்கு உயிர். அதிலும், கிரிக்கெட் போன்ற விஷயம் கிடைக்கும்போது, வார்த்தையில் விளையாடவும் நிறைய வாய்ப்பு உண்டு. அந்த வரிசையில், புதுப் புது தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தலாம்னு தோணுச்சு. ஒவ்வொரு மேட்ச்லயும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் என்ற திட்டத்தோட இறங்கியிருக்கேன். அந்த வகையில் ‘யார்க்கர் பால்’ என்றால் ‘கால்குத்தி’, ‘நகிள் பால்’ என்றால் ‘பூனைப்பிடி’ என்று இரு வார்த்தைகளை அறிமுகம் செய்தோம். அதற்கு நல்ல பாராட்டு. இதுபோல இன்னும் பல சுவாரஸ்யங்கள் இருக்கப்போகுது’’ என்கிறார் படவா கோபி.

SCROLL FOR NEXT