தமிழ் சினிமா

ஜாம்பாவான்கள் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் எம்.எஸ்.வி.- ரஜினி

செய்திப்பிரிவு

எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு துறவி போல் வாழ்ந்தவர் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு ரஜினிகாந்த் "எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு சாதாரண மனிதர் அல்ல. ரொம்ப அபூர்வமான மனிதர். அந்த மாதிரியான ஒரு மனிதர், சினிமா துறையில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு துறையிலும் பார்ப்பது அபூர்வம்.

கள்ளம், கபடம், பொய், பொறாமை போன்ற எதுவுமே இல்லாமல் ஒரு துறவி போல வாழ்ந்தவர். எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னால் எம்.எஸ்.வி இருந்தார். அவர் இல்லாமல் கண்ணதாசனோ, வாலியோ, ஸ்ரீதரோ, பாலசந்தரோ இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக் கொள்கிறேன். " என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT