தமிழ் சினிமா

'காப்பான்' வெளியீடு தள்ளிவைப்பு; செப்டம்பர் 20-ம் தேதி ரிலீஸ் 

செய்திப்பிரிவு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காப்பான்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹீரோயினாக சயீஷா நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

சூர்யாவின் 37-வது படமான இதில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். கடந்த வருடம் (2018) ஜூன் 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. ஆகஸ்ட் 30-ம் தேதி 'காப்பான்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 20-ம் தேதி 'காப்பான்' வெளியாகும் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில் 'காப்பான்' திரைப்படம் தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என்ற பெயரில் வெளியாகிறது. 
 

SCROLL FOR NEXT