தமிழ் சினிமா

விஜய் பார்க்காத துரோகம் இல்லை: நண்பர் சஞ்சீவ் ட்வீட் 

செய்திப்பிரிவு

விஜய் பார்க்காத துரோகமும் இல்லை. விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்லை என்று அவரது நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நாயகனுமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். 

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் விஜய்யை இழிவுபடுத்தும் வகையில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இளைஞர்களின் இந்த மனநிலையை கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் சிபிராஜ் ஆகியோர் விமர்சித்தனர். #LongLiveVIJAY என்ற பெயரில்  விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய அதில் விஜய்க்கு ஆதரவாக நடிகர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். 

விஜய்யின் நெருங்கிய நண்பரும் அவருடன் சில படங்களில் நடித்தவருமான சின்னத்திரை நாயகன் சஞ்சீவ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் ஜோசப் விஜய் டூ தளபதி விஜய். #LongLiveVIJAY'' என்று தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT