தமிழ் சினிமா

திரை விமர்சனம்: A1

செய்திப்பிரிவு

ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந் தவர் நாயகி தாரா அலிஷா. தன் சமூகத்தை சேர்ந்த வீரமிக்க ஒருவரையே திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதேபோல, போக்குவரத்துக் காவ லர் ஒருவர் அவரை காதலிக்க, தன் தோழியோடு சேர்ந்து அவருக்கு ஒரு சோதனை வைக்கிறார் அலிஷா. இடையில் நுழையும் சந்தானம் தனது ஜகதல பிரதாபங்களைக் காட்ட, அலிஷாவுக்கு அவரைப் பிடித்துப் போகிறது. கண்டதும் காதல் கொள் கிறார். பின்னர், அவர் தனது சமூ கத்தை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்ததும் விலகுகிறார். பிறகு, சந்தானத்தின் நல்ல உள்ளம் புரிந்து மீண்டும் காதல் கொள்கிறார். ஆனால், திருமணத்துக்கு அலிஷா வின் தந்தை யதின் கார்யேகர் மறுத்து விடுகிறார். இதில் விரக்தியடையும் சந்தானம், நண்பர்களுடன் மது அருந்துகிறார். அலிஷாவின் அப்பா வைக் கொன்றாவது காதலியை திருமணம் செய்ய வேண்டும் என்று போதையில் புலம்ப, அவருக்கு உதவுவதாக நினைத்து, கார்யேகரை கடத்திக் கொலை செய்கின்றனர் நண் பர்கள். இந்த சிக்கலில் இருந்து சந் தானம் எப்படி மீள்கிறார்? காதலியை கரம்பிடித்தாரா? என்பதை சொல் கிறது ‘ஏ1’ (அக்யூஸ்டு நம்பர் 1).

சந்தானத்தின் டைமிங் காமெ டியை நம்பி களமிறங்கியுள்ள அறி முக இயக்குநர் ஜான்சன், அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார். சந்தானத்தின் படத்தில் என்ன எதிர்பார்க்கலாமோ, அதை காட் சிக்கு காட்சி தூவியுள்ளனர். மொக்கை காமெடி என்றாலும், போகிற போக்கில் ரசிக்க வைக்கிறது.

‘காமெடியனாக இருந்தே கதா நாயகன் ஆகியிருக்கிறோம்’ என் பதை உணர்ந்து சற்றே அடக்கி வாசிக் கிறார் சந்தானம். அதேநேரம், பெண் களை இழிவுபடுத்துகிற, இரட்டை அர்த்தம் தொனிக்கிற வசனங்களை இனி முழுவதுமாக தவிர்ப்பதே ‘கதா நாயகன்’ சந்தானத்துக்கு அழகு.

காதல், காமெடி இரண்டையும் நிறைவாக செய்திருக்கிறார் நாயகி தாரா அலிஷா. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த புதுவரவு - நல்வரவு.ஆனால், இருவருக்குமான கெமிஸ்ட்ரி சுமார்.

சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர், கொடுத்த பாத்தி ரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். யதின் கார்யேகரை ஆரம்பத்தில் கறார் ஆபீஸராக காட்டிவிட்டு, கடைசி யில் டம்மி பீஸ் ஆக்கிவிட்டார்கள்.

சந்தானத்தோடு சேர்ந்து ரெடின், டைகர் கார்டன் தங்கதுரை, மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், மனோகர், ஷேசு அனைவரும் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றனர். இடைவேளைக்குப் பிறகு சற்றே தொய்வடையும் காட்சிகளை மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் இருவரும் தூக்கி நிறுத்துகின்றனர்.

பெரிதாக திரைக்கதை என்பது இல்லாத சூழலில், ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்திருக்கும் லியோ ஜான் பாலின் நேர்த்தியான படத்தொகுப்பும், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத் துக்கு பலம். சந்தோஷ் நாரா யணன் இசையில், குறைந்த மணித் துளிகளில் முடிவடையும் கானா வகை பாடல்கள் ரசிக்க வைக் கின்றன. ‘மாலை நேர’ பாடல் வித் தியாசமாக இருக்கிறது.

சைவம் மட்டுமே சாப்பிடும் காத லியை ஆஃப்-பாயில் சாப்பிடச் சொல்வது, எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் இறைவனுக்கு படையலிட்டு மக னுக்காக காத்திருக்கும் தருணத்தில் வரும் அலம்பல்கள், நாயகியின் தந்தையை மனிதநேயராகக் காட்டி, பிறகு கண்ணியக் குறைவாக காட்டு வது போன்ற இடங்களில் காமெடி என்ற பெயரில் முகம்சுளிக்க வைக் கிறார் இயக்குநர்.

மென்பொருள் நிறுவனத்தில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நாயகி, ஊரை சுற்றும் இளை ஞரை காதலிக்க மெனக்கெடுவதும் ஏற்கும்படி இல்லை.

இதுபோன்ற நெருடல்களை புறம்தள்ளினால், சந்தோஷமாக சிரித்துவிட்டு வரலாம்!

SCROLL FOR NEXT