கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந் தது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஆர்யா, இயக்குநர் ஷங்கர், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது. அவர் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அதை வரவேற்கிறேன். இதுகுறித்து நான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்கும் என இங்கே சொன்னார்கள். ஆனால், சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது.
மாணவர்கள் படும் கஷ்டங் களை சூர்யா கண் எதிரே பார்த்த வர். மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
முன்னதாக கவிஞர் கபிலன் பேசும்போது, ‘‘புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சூர்யா பேசிய பேச்சை ரஜினிகாந்த் பேசியிருந்தால் அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார்’’ என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசும் போது, ‘‘சினிமாவில் வேலை பார்க் கிறோம், அதற்குரிய சம்பளம் வாங்குகிறோம் அதோடு தன் உறவு முடிந்துவிட்டது என இருந்து விடாமல் தனக்கும் சமூக அக்கறை உண்டு என செயல்படுகிறவர் சூர்யா. அவருக்கு என் வாழ்த்துகள்’’ என்றார்.
சூர்யா பேசும்போது, ‘‘எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடாமுயற்சி தவறக்கூடாது என நினைப்பவன் நான். எப்போதும் எதை செய்தாலும் அதை விளம் பரத்துக்காக செய்யக்கூடாது. அப் படி செய்தால் நம் மீதான மதிப்பு குறைந்துவிடும். நிஜ வாழ்க்கை யில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன்’’ என்றார்.