இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

நல்ல கருத்துக்களைக் கூற சுதந்திரம் இல்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை

செய்திப்பிரிவு

நல்ல கருத்துக்களைக் கூற சுதந்திரம் இல்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

2019-2021 ஆம் ஆண்டுக்கான இயக்குநர் சங்கத் தேர்தல் இன்று (ஜுலை 21) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் கலந்து கொண்டு வாக்களித்து வருகிறார்கள். தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தமாக 19 பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “இயக்குநர் விக்ரமன் தலைமையேற்ற பிறகு பல நல்ல காரியங்கள் இயக்குநர் சங்கத்தில் நடந்து கொண்டிருந்தது அனைவருக்குமே தெரியும். அவர்களுடைய அணி மீண்டும் வந்தால் இன்னும் பல நல்ல காரியங்கள் நடக்கும். 

நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேச முடிவதில்லை. அவற்றை பேசுவதற்கே சுதந்திரம் இல்லாத நிலைதான் இங்கு உள்ளது. தற்போது சூர்யாவுக்கும் அது நடந்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என்று பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் நாதன், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளன.

SCROLL FOR NEXT