இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி கேமராவை இயக்கி, படப்பிடிப்பை தொடங்கிவைத்தார்.
‘‘இதுவரை நான் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் முழு பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நகைச்சுவைப் படமாக இது இருக்கும். சென்னை வாழ்க்கையை மையமாக கொண்டே படப்பிடிப்பு நடத்துகிறோம். விஜித்தும், முனீஸ்காந்தும் இணையான கதாபாத்திரங்களில் வருவார்கள். மிலனா நாகராஜ், அஸ்வினி என 2 கதாநாயகிகள். ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்று தங்கர் பச்சான் கூறினார்.