டியர் காம்ரேட் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | படம்: எல்.சீனிவாசன் 
தமிழ் சினிமா

விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்: ராஷ்மிகா

செய்திப்பிரிவு

விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன் என்று 'டியர் காம்ரேட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஷ்மிகா தெரிவித்தார்.

பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. தெலுங்கில் தொடங்கப்பட்ட இந்தப் படம், அதன் கதைக்களம் அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும் பொருந்தும் என படக்குழு கருதியுள்ளது. இதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

'டியர் காம்ரேட்' படத்தை அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்த, அந்தந்த மொழிகளில் மியூசிகல் நைட் நிகழ்ச்சியை படக்குழுவினர் அரங்கேற்றி வருகிறார்கள். சென்னையில் மியூசிக்கல் நைட் நிகழ்வு நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. மேலும், நேற்று (ஜூலை 19) காலை பத்திரிகையாளர்களையும் சந்தித்தது படக்குழு.

அச்சந்திப்பில் நாயகி ராஷ்மிகா பேசும் போது, “நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என திரையுலகில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. எந்த மொழியிலும் நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். குஜராத்தி படம் கிடைத்தாலும் நடிப்பேன். 

விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன். அவரோடு 2 படங்களில் நடித்துவிட்டேன். மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர். லில்லி என்ற மாநில அளவிலான கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளேன். அதில்  அனைத்துப் பெண்களின் வாழ்க்கை முறையையும் காணலாம்.

இந்தப் படத்துக்காக 5 மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் விளையாட்டு வீராங்கனையாக இருந்தேன். ஆனால், கிரிக்கெட் விளையாடியதில்லை. இந்தப் படத்துக்காக பயிற்சி செய்து நடித்துள்ளேன். எப்படி நடித்துள்ளேன் என்பது படம் பார்த்தீர்கள் என்றால் தெரியும்” என்றார் ராஷ்மிகா.

SCROLL FOR NEXT