தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார். ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.
தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாரி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து, இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே 'யு' சான்றிதழ் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து படக்குழு, மறுதணிக்கைக் குழுவிற்கு படத்தை நேற்று (ஜூலை 7) திரையிட்டு காட்டினார்கள். சென்சார் அதிகாரிகள் சில காட்சிகளின் வசனத்தை MUTE செய்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
தற்போது மறுதணிக்கை அதிகாரிகள் 'யு' கொடுத்துவிட்டால், வெளியீட்டிற்கான பணிகளை தொடங்கிவிட்டார்கள். ஜூலை 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.