தமிழ் சினிமா

மாலை நேரத்து மயக்கம் சர்ச்சை: படக்குழு விளக்கம்

ஸ்கிரீனன்

'மாலை நேரத்து மயக்கம்' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.

புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, 'கான்' படத்தில் செல்வராகவன் செலுத்து வருவதால் 'மாலை நேரத்து மயக்கம்' பாதிக்கப்படுகிறது. படம் தாமதமாகி கொண்டே வருவதால், தற்கொலை செய்து கொள்வேன் என தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் இயக்குநர் செல்வராகனிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இச்செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது 'மாலை நேரத்து மயக்கம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாயகி வாமிகா இந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது தேதிகள் கிடைப்பதில் தாமதமானது. தற்போது அவரது தேதிகள் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல்காட்சிகளுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT