ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகி யார் என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. முன்னணி நாயகிகள் யாராவது தான் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ராதிகா ஆப்தேவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். விரைவில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது படக்குழு.
ஏற்கனவே பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.