தமிழ் சினிமா

எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலையில் முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சென்னையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனின் (88) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.எஸ்.வி டைம்ஸ்.காம் நிர்வாகி விஜய கிருஷ்ணன் கூறும்போது, “வயது மூப்பு பிரச்சினை காரணமாக எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக் குப் பின் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இசை மற்றும் பாடல்கள் குறித்து பேசினால் ஆர்வமாக கேட்கிறார். பார்வையாளர்களை கட்டுப்படுத்துவதற்காகவே மருத்து வர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT