மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை சரண்யா மோகன், பல் மருத்துவரை மணக்கிறார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான அரவிந்த் கிருஷ்ணாவோடு ஜூலை 12-ம் தேதி சரண்யா மோகனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தமிழில் 'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடிக் குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். 1997ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர்.