மெல்லிசை வித்தகரை இழந்துவிட்டோம் என எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "எம்.எஸ்.வி கடந்த 40 ஆண்டுகளாக நம் அனைவரையும் தமிழின் ஆழத்தையும், இசையின் வர்ண ஜாலத்தையும் உணரச் செய்தார்.
மெல்லிசை வித்தகரை நாம் இழந்துவிட்டோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருளட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.