தமிழ் சினிமா

புலி புகைப்படங்கள் வெளியாகும் விவகாரம்: படக்குழு காட்டம்

ஸ்கிரீனன்

சமூக வலைத்தளங்களில் 'புலி' புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகும் விவகாரம் தொடர்பாக படக்குழு போலீஸிடம் புகார் அளித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி,சுதீப் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'புலி'. நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் ஆகியவற்றை விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டது.

அதிகாரப்பூர்வமாக 'புலி' சம்பந்தப்பட்ட 3 படங்களை மட்டுமே படக்குழு வெளியிட்டு இருக்கிறது. ஆனால், 10க்கும் அதிகமான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி விட்டது. இதனால் படக்குழ் பெரும் அதிர்ச்சி அடைந்தது.

ஏற்கனவே டீஸர் திருட்டுத்தனமாக வெளியான விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது புகைப்படங்கள் வெளியாகும் விவகாரம் தொடர்பாகவும் படக்குழு சென்னை கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறது.

அப்புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பிரிவு படக்குழுவில் புகைப்படங்கள் விஷயத்தில் பணியாற்றியவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகைப்படங்கள் வெளியிட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படக்குழ் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT