தமிழ் சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கவில்லை: சரத்குமார் தகவல்

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவான ரோட்ராக்ட் சார்பில் மாணவர்கள் ஆற்றிவரும் சமூக சேவையைப் பாராட்டி விருது வழங்கும் விழா சென்னை எம்ஆர்சி நகரில் நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமக தலைவரும் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

நடிகர் சங்கத் தேர்தலில் பல்வேறு பொறுப்பு களுக்கு யாரை நிறுத்தப் போகிறீர்கள்?

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தை மீடியாக்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. இந்தத் தேர்தலால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிடப் போவதாக கூறப்படு கிறதே?

கடந்த 2 முறையும் தேர்தல் நடக்கும் போதே இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன்வந்தேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவான ரோட்ராக்ட் சார்பில் மாணவர்கள் ஆற்றிவரும் சமூக சேவையை பாராட்டி விருது வழங்கும் விழா சென்னை எம்ஆர்சி நகரில் நேற்று நடந்தது.

SCROLL FOR NEXT