தமிழ் சினிமா

ரஜினி - ரஞ்சித் இணையும் படம்: ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித், ரஜினி நடிப்பில் மூன்றாவது படம் இயக்குகிறார். இதை தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு இன்னும் டைட்டிக் வைக்கவில்லை. இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காக் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT