இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவர், இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.