வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருக்கும் 'கோச்சடையான்' படம் குறித்த இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோச்சடையான்'. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
நீண்ட முயற்சிக்குப் பிறகு இப்படம் மே 23ம் தேதி வெளிவரும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் 'கோச்சடையான்' பற்றிய கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
"ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்." என்று ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.