தமிழ் சினிமா

தூங்காவனம் குழுவில் இணைந்த மதுஷாலினி, யூகி சேது

ஸ்கிரீனன்

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'தூங்காவனம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க மதுஷாலினி மற்றும் யூகி சேது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதைப்படி 3 நாயகிகள் இருக்கிறார்கள். த்ரிஷா முக்கிய நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். இன்னொரு முக்கிய பாத்திரத்திற்கு மதுஷாலினி தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார். கமலின் நெருங்கிய நண்பர் யூகி சேதுவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT