தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டாதீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது தலைக்கவசம் அணிந்து கொள் வதை அவசியமாக கொள்ள வேண்டும். சினிமாவில் நடிகர்கள் தலைக்கவசம் போடுவதில்லையே என்று இங்கே முதல் வாதமாக மற்றும் எதிர் வாதமாக வைக்கப் படுகிறது.
சர்க்கஸ் பார்க்கும் போது அதில் வரும் கலைஞர்கள் அந்தரத்தில் தொங்குவார்கள். அதையெல்லாம் நாம் வீட்டு பைப்பில் செய்து பார்க்க முடியாது. சினிமா கலைஞர்களுக்கு படப்பிடிப்பின் போது அவர்களின் அருகில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும் போது தெரியாது. ஆனால், அந்த பாதுகாப்புகளுடன்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்து விட்டு நீங்கள் பாதுகாப்பு இல்லாமல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டாதீர்கள். சினிமாவில் சூப்பர் மேன் சாகசங்கள் செய்கிறார்கள். அதை நிஜ வாழ்வில் நாம் செய்து பார்க்க முயற்சி செய்யக்கூடாது. ஆகவே, தலைக்கவசம் அணிந்து வாழ்வை பாதுகாப்போம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.