தமிழ் சினிமா

ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது வி.எஸ்.ஓ.பி

ஸ்கிரீனன்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்து வரும் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' (வி.எஸ்.ஓ.பி) ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தைத் தொடர்ந்து ஆர்யா, சந்தானம் நடிக்கும் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்தை துவக்கினார் இயக்குநர் ராஜேஷ். தமன்னா, கருணாகரன், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஆர்யா நாயகனாக நடித்து இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஷால் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. முழுப் படப்பிடிப்பும் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், " வி.எஸ்.ஓ.பி படப்பிடிப்புத் தளத்தில் காமெடி சூப்பர் ஸ்டாருடன். இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகிறது. உற்சாகமாக இருக்கிறேன் “ என்று ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் கொண்டு 'வி.எஸ்.ஓ.பி' வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT