தமிழ் சினிமா

அச்சம் என்பது மடமையடா படத்தில் பாபா செகல்

ஸ்கிரீனன்

சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பாடகர் பாபா செகல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன், மீண்டும் சிம்புவை இயக்கி வருகிறார். படத்திற்கு 'அச்சம் என்பது மடமையடா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பல்லவி சுபாஷ் நாயகியாக நடித்து வந்த இப்படத்தில் தற்போது மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.

தமிழில் சிம்புவும், தெலுங்கில் நாகசைதன்யாவும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளுக்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாடகர் பாபா செகல் நடித்து வருகிறார். "எனது நண்பர் கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில், தவறான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாபா செகல் தெரிவித்து இருக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT