தமிழ் சினிமா

ரஜினி - ரஞ்சித் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன்

ஸ்கிரீனன்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'லிங்கா' படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த், இறுதியாக ரஞ்சித் கதையில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினியோடு வரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் கலையரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT