தமிழ் சினிமா

இயக்குநர் சங்க கட்டிடத்தில் கே.பாலசந்தர் பெயரில் திரையரங்கம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் கே.பாலசந்தர் பெயரில் புதிய திரையரங்கம் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா இந்த திரையரங்கை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசும்போது, “இயக்குநர் பால சந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர். அவரைப் போலவே வளரும் இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது தனித்த அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்

SCROLL FOR NEXT