தமிழ் சினிமா

பாண்டிராஜின் ஹைக்கூ பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்கிரீனன்

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலர் நடித்து வரும் படம் 'ஹைக்கூ'. ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி, தயாரித்து வருகிறார். முதல் பிரதி அடிப்படையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த 'இது நம்ம ஆளு' படத்தின் தாமதத்தால் 'ஹைக்கூ' படத்தை துவங்கினார் பாண்டிராஜ். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறும் தருவாயில் இருக்கிறது. சூர்யா, அமலா பால் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன.

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாஸ்' படத்துடன் 'ஹைக்கூ' படத்தின் டீஸர் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று சமூக வலைதளங்களில் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை 'ஹைக்கூ' டீஸரையும் யூ - டியூப் தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT