தமிழ் சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விஷால் திட்டம்

செய்திப்பிரிவு

கோரிக்கையை ஏற்காவிட்டால், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார் நடிகர் விஷால்.

புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினரை நேற்று சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களின் உழைப்பால் உருவான நடிகர் சங்கக் கட்டிடத்தை, தனியார்வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஏற்க முடியாது. அங்கு திருமண மண்டபத்துடன் கூடிய புதிய சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், நடிகர்களின் குடும்பத்தினர் வாடகையின்றி திருமணத்தை நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும். இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் ஏற்காவிட்டால், சங்கத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனினும், தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக நான் புதுக்கோட்டைக்கு வரவில்லை என்றார். நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT