'வாலு' திரைப்படத்தை சிம்புவே தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட முடிவு செய்துள்ளார். 'வாலு' திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகிறது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'.
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக 'வாலு' படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. பல்வேறு பிரச்சினைகள் முடிந்த நிலையில், சிம்பு 'வாலு' திரைப்படத்தை வாங்கியிருக்கிறார். தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் படத்தை வெளியிடுகிறார்.
இம்மாதம் 'வாலு' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சன் டிவிக்கு தொலைக்காட்சி உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.