தமிழ் சினிமா

உதயநிதிக்கு வில்லனாகும் விக்ராந்த்: இது கெத்து அப்டேட்

ஸ்கிரீனன்

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் 'கெத்து' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விக்ராந்த்

'நண்பேன்டா' படத்தைத் தொடர்ந்து 'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. 'கெத்து' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் ஏமி ஜாக்சன், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை உதயநிதி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் உதயநிதிக்கு வில்லன் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது விக்ராந்த் உதயநிதிக்கு வில்லனாக நடித்து வருகிறார். உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

உதயநிதியின் படங்களில் பாடல்களை வெளிநாட்டில் படமாக்குவார்கள். ஆனால், 'கெத்து' படத்தின் பாடல்களை இந்தியாவிலேயே படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விரைவில் அனைத்து பணிகளும் முடித்து, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கெத்து' படத்தைத் தொடர்ந்து அஹ்மத் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி.

SCROLL FOR NEXT