தயாரிப்பாளர் வருண்மணியனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதை த்ரிஷா தனது ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
த்ரிஷாவும், தொழிலதிபர் வருண் மணியனும் காதலித்து வந்தார்கள். இருவரது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள். ஜனவரி 23ம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக வருண்மணியன் இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்தளித்தார் த்ரிஷா.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா - வருண்மணியன் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்த போது அவர்களும் உறுதிப்படுத்தினார்கள். கமலுடன் ஒரு படம், 'அரண்மனை 2' என தொடர்ச்சியாக படங்கள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்தார்.
தற்போது, "என்னைப் பற்றி நிறைய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. கொஞ்சம் செய்திகளுக்கு ஒய்வு கொடுங்கள். நான் தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் த்ரிஷா.
இதன் மூலம் த்ரிஷா - வருண்மணியின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருப்பது உறுதியாகி இருக்கிறது