தமிழ் சினிமா

நேபாள நிலநடுக்கம்: விஜய் ரசிகர்கள் உதவிக்கரம்

ஐஏஎன்எஸ்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கின்றனர். ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை மற்றும் மருந்துகளை அவர்கள் நேபாள மக்களுக்கு அளிக்கவுள்ளனர்.

"நடிகர் விஜய் துவக்கி வைத்த விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் இந்த நிவாரண உதவிக்கு முன்வந்துள்ளனர். 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அவர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்" என்று இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

புலி படத்தின் படப்பிடிப்புக்காக கம்போடியாவில் இருக்கும் நடிகர் விஜய், ரசிகர்களின் இந்த செயல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT