இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனிரத்னத்துக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவர் தங்கள் பராமரிப்பில் இருப்பதை உறுதி செய்தனர். இருப்பினும் விபத்து காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டாரா இல்லை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, "இயக்குநர் மனிரத்னத்தின் குடும்பத்தினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனவே எங்களால் எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துவிட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.