தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா, @arya_offl என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சமீபத்தில் வெளியான 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தைத் தொடர்ந்து 'யட்சன்', 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க', 'பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆர்யா பெயரில் பல்வேறு போலி கணக்குகள் ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தன. தற்போது அதிகாரப்பூர்வமாக @arya_offl என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இணைத்திருக்கிறார் ஆர்யா.
"ட்விட்டர் தளத்தில் இணைந்ததை சந்தோஷமாக கருதுகிறேன். இது தான் என்னுடைய தனிப்பட்ட கணக்காகும். உங்களுடன் நேரடியாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி" என்று தனது முதல் ட்வீட்டாக வெளியிட்டு இருக்கிறார் ஆர்யா.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்திருக்கும் 'யட்சன்' படத்தின் டீஸரை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.