தமிழ் சினிமா

முதல் முறையாக அஜித்துடன் இணையும் சூரி

ஸ்கிரீனன்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூரி.

'வீரம்' சிவா - அஜித் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்கவிருக்கிறது. சண்டைக் காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.

அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன், நாயகியாக ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக வெற்றி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'வீரம்' படத்தில் நடிக்கவே சூரியிடம் பேசினார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற சூரியின் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது.

'வீரம்' சிவா - அஜித் படம் மட்டுமன்றி, 'அரண்மணை 2', 'சிங்கம் 3' ஆகிய படங்களிலும் சூரி ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT