'ஜிகர்தண்டா' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'இறைவி' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அப்படத்தைத் தொடர்ந்து தனது படத்தின் பணிகளை கவனித்து வந்தார்.
சி.வி.குமார் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கும் படத்துக்கு 'இறைவி' என்று தலைப்பிட்டார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இருக்கிறது.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'இறுதிச் சுற்று' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சிவா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
அஞ்சலியைத் தவிர மேலும் 2 நாயகிகள் இப்படத்தில் இருக்கிறார்கள். முன்னணி நடிகைகளுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.