தமிழ் சினிமா

நானே சொல்கிறேன்.. அதுவரை பொறுங்கள்: சித்தார்த்

ஸ்கிரீனன்

"என்னைப் பற்றி வெளியாகும் இருக்கும் செய்திகளில் உண்மையில்லை" என்று நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருக்கிறது, ஸ்ருதிஹாசனைக் காதலிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தன. அதனை இருவருமே மறுத்தனர்.

பின்னர், சித்தார்த் - சமந்தா இருவருக்கும் காதலிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து இருவருமே விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சித்தார்த்தும் சமந்தாவும் திருமணம் செய்து கொண்டனர் என்றும், சித்தார்த்துக்கு 15 வயதில் பையன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இச்செய்தி குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் தளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். "என்னைப் பற்றியும் எனது குடும்பம் பற்றியும் தவறான செய்திகள் சில நாட்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை என்னை கவலைகொள்ள வைக்கின்றன. இது போல பல வருடங்கள் முன்பு பரப்பப்பட்ட தவறான தகவல்களால, எனக்கு டீன் ஏஜில் பிள்ளைகள் இருப்பதாகக் கூட நம்புகிறார்கள்.பொறுப்பில்லாமல் எழுதப்பட்ட ஒரு கட்டுரை பல வருடங்களுக்கு தாக்கம் ஏற்படுத்துகிறது. எனக்கு 35 வயதாகிறது. இப்போது தான் மிகத் தீவிரமாக வேலை செய்துவருகிறேன். நான் வாழ்க்கையில் செட்டில் ஆனதும் கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிவிக்கிறேன். அதுவரை, பொறுங்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

SCROLL FOR NEXT