ரஜினியை இயக்குகிறார் இளம் சினிமா படைப்பாளி பா.ரஞ்சித். தமிழ் சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு வரிச் செய்தி இது.
'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய தரமான படங்களை வழங்கி, தீவிர சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களையும் வளைத்தவர் ரஞ்சித். கால்ஷீட் ஹீரோக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
'கோச்சடையான்', 'லிங்கா' என வரிசையாக வந்த எந்தப் படங்களும் ரஜினி ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
இப்படி ஒரு முக்கியமான கட்டத்தில் ரஜினி - ரஞ்சித் கூட்டணி உருவாகியுள்ளது. புதுமையான படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கும், எப்போதுமே 'தலைவர்' படங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு வரப்போகும் படம் மிகப் பெரிய தீணியாக அமைய வாய்ப்புண்டு.
பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் அலசி, ட்விட்டர்வாசிகள் பதிந்துள்ள கருத்துகளின் தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
ட்விட்டர்MGR @RavikumarMGR - ரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்கிறாரா அல்லது ரஜினி படத்தை ரஞ்சித் இயக்குகிறாரா? என்பதில் அடங்கியிருக்கிறது! வெற்றியும் தோல்வியும்!
பித்தன் @kiramaththan - மெட்ராஸ் படத்துல கார்த்திக்கை காப்பாத்துன கலையரசன் மாதிரி, ரஜினி படத்துக்கும் ஒரு நடிகனை சேத்துக்கிட்டா வெற்றி நிச்சயம் ரஞ்சித்துக்கு! :)
பொல்லாதவன் @appu617 - ரஜினி - ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன். கேட்கும் போதே ஃபெரெஷா இருக்கு ஜி. வாங்க ஜி வாங்க ஜி.
சில்லுண்டி| @iindran - ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் எனும் தகவல் உண்மையாயிருக்குமாயின், நீங்கள் ரஜினியிடம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான முதல் படியிது.
குறும்பு விவேக் © @kurumbuvivek - ரஜினி - ரஞ்சித் - சந்தோஷ்.... இதென்ன வித்தியாசமான காம்போ... பொங்கலும் கொத்துக்கறியும் மாதிரி.
Pradeesh @gpradeesh - கவனிச்சிங்களா... எம்ஜிஆர், ரஜினி, அஜித் மூணு பேருக்குமே நடு எழுத்து 'ஜி'. அதுனால? ஒன்னுமில்ல.. டீ குட்ஸ்ட்டா எந்திரிச்சு போ.
Kuttybalaji @balaji4165 - அட்டக்கத்தி "ரஞ்சித்" இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது அடுத்தபடத்தில் நடிக்கிறார் - செய்தி. ## காதல் காட்சிகள் நிறைந்த படமா?
மேட்டூர் சிங்கம்டா @adangathavan - ரஞ்சித் - ரஜினி #முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை மாதிரியான கிளாஸான படமா வரும்னு நம்பறேன்.
உளவாளி @withkaran - அட்டகத்தி ரஞ்சித் ரஜினி படம் கன்பார்ம் ஆயிருச்சு போல..#தலைவர் படத்துல குறியீடுலாம் வச்சா குறுக்குலயே மிதிப்பானுங்களே..
நவினன் @navin_iv - ரஜினி - ரஞ்சித் படமா? உண்மயெனில் ரஞ்சித்துக்கு இது அசுர பாய்ச்சல்,ரஜினி கடைசி படமென சொல்லி சூப்பர் ஸ்டாராய் விடைபெறலாம்.
சுப்புணி @iamsubramani - தலைவர் படத்துக்கு ரஞ்சித் செட்டாக மாட்டாரே ம்ம்ம் #சரிபாக்கலாம்.
Vivek tweets @Vivekthangal - கண்டிப்பா கானா பாலாக்கு ஒரு பாட்டு இருக்கும் படத்துல. ரஜினி - ரஞ்சித் தெறி காம்போ.
சைதை தமிழரசன் @Kolaveriboy - ரஜினியென்ன, ஜேம்ஸ் பாண்டே நடிக்க வந்தாலும் அதுலயும் ஜாதிய குறியீடு வைப்பாப்ள நம்ம குறியீடு ரஞ்சித்.
இளந்தென்றல் @Elanthenral - ரஞ்சித் மட்டுமில்லை. சினிமாவில் இன்றுதான் நுழையும் இயக்குனர் கூட ரஜினிக்கு ஒரு கதை வைத்திருப்பார்கள்!!!