தமிழ் சினிமா

சிம்பு - செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஸ்கிரீனன்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் துவங்கியது

'இரண்டாம் உலகம்' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கவிருந்த அடுத்த படத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படம் தள்ளிப்போனது.

தற்போது அப்படத்தை மீண்டும் துவங்கி இருக்கிறார்கள். முதலில் த்ரிஷா மற்றும் டாப்ஸி நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ ஷுட் நடைபெற்றது. தேதிகள் பிரச்சினைகள் காரணமாக த்ரிஷா விலக, அந்த வேடத்தில் கேத்ரீன் தெரஸா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிம்பு - செல்வராகவன் இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கி இருக்கிறது. Glo studios என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றார்கள்.

ஜெகதி பாபு மற்றும் சுரேஷ் இருவருமே இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT