சிம்பு - செல்வராகவன் இணையும் படத்தில் இருந்து தேதிகள் பிரச்சினை காரணமாக நாயகி த்ரிஷா விலகி விட்டார்.
சிம்பு, செல்வராகவன் இருவரும் இணைந்து படம் பண்ணவிருக்கிறார்கள் என்பது சில நாட்களுக்கு முன்பு ஹாட் டாப்பிக்காக இருந்தது. இப்படத்தில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது வெளியாகாமல் இருந்தது.
தற்போது த்ரிஷா, டாப்ஸி இருவரும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்கள். ஜகபதி பாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மே முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க திட்டமிட்டார்கள்.
இப்படத்துக்காக போட்டோ ஷுட் சென்னையில் நடைபெற்றது. அதில் த்ரிஷா கலந்து கொண்டார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் தேதிகள் பிரச்சினை காரணமாக த்ரிஷா இப்படத்தில் இருந்து விலகி விட்டார். கமல் படம், 'அரண்மனை 2' ஆகிய படங்களுக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் செல்வராகவன் படத்தில் இருந்து த்ரிஷா வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
த்ரிஷா இல்லையென்றாலும் மே 11ம் தேதி படப்பிடிப்பு சென்று விடலாம். அவருக்கு மாற்றாக வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்