நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படத்தில் இந்துமத நம்பிக்கைகளுக்கு எதிராக பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதால், அத்திரைப் படத் துக்கு தடை விதிக்கக்கோரி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் அமைப்பு செயலாளர் எஸ்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல்ஹாசன் நடித் துள்ள உத்தமவில்லன் படத் தில் ‘என் உதிரத்தின் விதை’ என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களையும் வழிப்படு வது வழக்கம்.
இவற்றை எல்லாம் அவ மதிக்கும் விதத்தில் இப்பாடல்கள் உள்ளன. எனவே, பாடல் வரியையும், வார்த்தையையும் நீக்கவேண்டும் என்று திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர், தமிழக உள்துறை செயலர் ஆகி யோருக்கு கடந்த 6-ம் தேதி புகார் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனிடையே வரும் மே 1-ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியிடப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தை அவமானப்படுத்துகின்றனர் என்று மனுதாரர் கூறுவதுபோல் எவ்வித தவறும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. இவ்வழக் கில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.”
சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
திருச்சியில் நேற்று நிருபர்களிடம் பேசிய தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் கோபால்ஜி, உத்தம வில்லன் திரைப்படத்தில் இடம் பெற் றுள்ள சில பாடல் வரிகளையும், பெருமாள் கடவுள் குறித்த அவதூறான காட்சிகளையும் நீக்க வலியுறுத்தி, சென்னையில் ஏப். 29-ம் தேதி (நாளை) ஆர்ப் பாட்டம் நடத்தவுள்ளோம். இதற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்’ என்றார்.