தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ஜீவா - நயன்தாரா

செய்திப்பிரிவு

'ஈ' படத்துக்குப் பிறகு ஜீவா, நயன்தாரா ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

கருணாஸ் நடிப்பில் 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கியவர் ராம்நாத். இவர் தற்போது ஜீவா நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஜனநாதன் இயக்கிய 'ஈ' திரைப்படத்தில் ஜீவாவும், நயன்தாராவும் இணைந்து நடித்தனர். இப்படம் 2006-ல் ரிலீஸ் ஆனது. தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு ஜீவாவும், நயன் தாராவும் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

ஜீவா தற்போது 'யாமிருக்கே பயமே' இயக்குநர் டிகே இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கும் படத்தில் ஜீவா நடிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT