தமிழ் சினிமா

ஜெயம் ரவி படத்தில் பாடிய சிம்பு

செய்திப்பிரிவு

'அப்பாடக்கர் ' படத்தில் 'ஜெயம்' ரவிக்காக ஒரு குத்துப் பாடலை சிம்பு பாடி இருக்கிறார்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகிவரும் காமெடி கலந்த பொழ்துபோக்குப் படம் 'அப்பாடக்கர் '. பிரபு, சூரி, விவேக், அஸ்வின் ராஜா, ராஜேந்திரன், பூர்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை மதன் கார்க்கியும், அண்ணாமலையும் எழுதியுள்ளனர்.

இதில், ''ஹிட்டு சாங்கு மாமா இது ஹிட்டு சாங்கு மாமா கூட வந்து நீயும் ஒரு குத்து போடு மாமா'' என்று பாடலாசிரியர் அண்ணாமலை எழுதிய பாடலை சிம்பு பாடி இருக்கிறார்.

டி.இமான் ஏற்கெனவே ஒரு பாடலை பாடியுள்ள நிலையில், சிம்புவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளனர்.

தற்போது 'அப்பாடக்கர்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இசை வெளியீடும், ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT