தமிழ் சினிமா

ட்வீட்டாம்லேட்: கொம்பன் படமும் சில குசும்பு பார்வையும்

க.பத்மப்ரியா

சில பல அமர்க்கள அரங்கேற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது கார்த்தி நடித்த கொம்பன். முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றிய குறும்பதிவு பார்வைகளை ட்விட்டரில் தெறித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தகைய> கொம்பன் தெறிப்புகளின் சாம்பில்கள் இங்கே ட்வீட்டாம்லேட்டில்...

நடிகர் விவேக் ‏@Actor_Vivek - கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.

ஷாந்தனு பாக்யராஜ் ‏@imKBRshanthnu - தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.

சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - நான் மறுபடி மறுபடி கொம்பன் வெளியீட்டைத் தடுக்கக்கூடாது எனச் சொல்வதன் காரணம்... நாளைக்கு மெட்ராஸ் போன்ற படங்களையும் இதே பாணியில் தடுப்பார்கள். :-(

கோபிகாஷேக் ‏@kobikashok - இவங்க சொல்ற மாதிரி சாதிக் கலவரம் வராது என்பது படம் பார்த்தவங்களுக்கு தான் தெரியும். #கொம்பன் ஓர் அருமையான படம்.

கொம்பன் மோக்கியா ‏@Mokiyanew - @gvprakash ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ..

பாரதி ‏@BharathiBigB - ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல #கொம்பன்

முத்து ‏@ViscomMuthu - கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு அதிகபட்ச Punishment டா ஜில்லா படத்த போட்டு காட்றாங்க.

களபிரர் ‏@ponnumanis - கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம்.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! #கொம்பன்

தனிக்காட்டு ராஜா ‏@Er_Thameem - உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.

clash of clans ‏@thunder - என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா : )ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? #கொம்பன்

kandasamy ‏@kandasamykk - எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!

கார்க்கிபவா ‏@iamkarki - கார்த்தி கைல இருக்கிற பச்ச கயித்த தவிர பெருசா ஒண்ணும் சேதாரத்த காணோமே.... கட் பண்ணிட்டானுங்கன்னு முட்டு கொடுப்போம் #கொம்பன்

kandasamy ‏@kandasamykk - எத்தனை முறை லென்ஸ் வைத்து பார்த்தாலும் ஜாதிச்சண்டையை தூண்டிவிடும்படியான ஒரு காட்சி கூட நமக்கு தெரியவில்லை #Komban

suguna.diwakar@facebook - "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"

"ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"

"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"

- இவையெல்லாம் #கொம்பன் படம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள தத்துவ முத்துகள்.

அதாரு Naveen ‏@mechnaveen1206 - கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் யா #கொம்பன்

மதிஇளம்பரிதி.பெ.கொ.ப ‏@ortoncena007 - #கொம்பன் பழைய சோத்தை அழகான தட்டுல வெச்சு பரிமாறி இருக்குறாங்க!!

வாழவந்தார் ‏@Iam_SuMu - ஓஹோ! கொம்பன் படம் எப்படினு சொல்றதை வச்சி சாதி கண்டுப்பிடிக்குறாங்கடோய்!!

Qüëéñ Sāmãñthá ‏@sarath_krrish - கொம்பன் = குட்டிபுலி 2 | நண்பேண்டா = அழகுராஜா 2 | #சகாப்தம் ஏப்புடி???

SCROLL FOR NEXT