தமிழ் சினிமா

‘கோச்சடையான்’ ரிலீஸ் தாமதம் ஏன்? : பரபரப்பு தகவல்கள்

செய்திப்பிரிவு

‘கோச்சடையான்’ படத்தைக் கேட்டு ஏராளமானோர் அணுகியதால், மேலும் அதிக பிரதிகளை தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்தான் படத்தை வெளியிட தாமதம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோச்சடையான் படத்தை கடந்த மே 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டு திரையரங்குகளில் முன்பதிவு தொடங் கப்பட்டது. மொத்தம் 6 ஆயிரம் பிரின்ட்கள் போடப்பட்டு உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேலான திரையரங்குகளில் திரையிட திட்ட மிடப்பட்டது. இந்நிலையில் மேலும் 200 திரையரங்குகளில் இந்த திரைப் படத்தை திரையிட விரும்பி ஏராள மானோர் தொலைபேசி வாயிலாக வும், கடிதம் வாயிலாகவும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்வோரின் எண் ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வந்தது. சென்னையில் 2 மணி நேரத்துக்குள் 12,500 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

எனவே கூடுதலாக பிரதிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டது. எல்லா திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என்பதால் திரைப்பட வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மே 23-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருவது உறுதி என்று ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோச்சடையான் படம் இந்தியா வில் 6 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் இந்த படத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. எனவே மேலும் தாமதம் ஏற்படாது என்று இணை தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தார் உறுதியளித்துள்ளனர்.

வங்கிக் கடன் பிரச்சினை?

இந்நிலையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச் சினை ஏற்பட்டதாலேயே படத்தை வெளியிட காலதாமதமானதாக கூறப் படுகிறது. படத்தை தயாரிக்க ஒரு தனியார் வங்கியிலிருந்து ரூ.41 கோடி வாங்கியதாகவும், அந்த கடனை வரும் 16-ம் தேதிக்குள் திரும்ப செலுத்த வேண்டிய நெருக்கடி தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் எல்லா பிரச்சினையும் முடிந்து படம் மே 23-ம் தேதி வெளி யாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். ஒரு வேளை பிரச்சினை தீரவில்லை யென்றால் ஜூன் 6-ம் தேதி வரை பொறுத்திருப்பது, இல்லையேல் படத்தை வாங்க வேண்டாம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோலிவுட்டில் பல படங்களை தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர், கோச்சடை யான் படத்தை தயாரித்துள்ள ஈராஸ் நிறுவனத்துடன் சேர்ந்து அடுத் தடுத்து 3 படங்களை தயாரிக்க திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிறுவனமே ‘கோச்சடை யான்’படத்தை வெளியிட உதவி செய் யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகி றது. பிரச்சினைகள் முடிவுக்கு வந்து ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளி வர வேண்டும் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

SCROLL FOR NEXT