தமிழ் சினிமா

சிம்பு ஜோடியாக த்ரிஷா, டாப்ஸி: மே மாதம் படப்பிடிப்பு

ஸ்கிரீனன்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்துக்கு த்ரிஷா, டாப்ஸி இருவருமே நாயகிகளாக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

சிம்பு, செல்வராகவன் இருவரும் இணைந்து படம் பண்ணவிருக்கிறார்கள் என்பது சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இப்படத்தில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது த்ரிஷா, டாப்ஸி இருவரும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஜகபதி பாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மே முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது.

இப்படத்துக்காக போட்டோ ஷுட் சென்னையில் விரைவில் நடக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

SCROLL FOR NEXT